சீன ராணுவத்துடன் மோதல்..! இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்! வரிசையில் கிடத்தப்பட்ட சடலங்கள்! வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சீன ராணுவம் இந்திய எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த செய்தியானது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இதில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு இந்திய நாட்டை சேர்ந்த பிரபல தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் புகைப்படம் என கூறப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது இணையத்தில் பரவி வந்த நேரத்தில் உண்மையிலேயே இது சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களா? என்ற கேள்வியை பலரது மத்தியில் எழுப்பியது.

 தற்போது அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பல விடைகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன. காஷ்மீர் தி நியூஸ்' என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம், கால்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் சீனாவுடன் மோதலில் இறந்த வீரர்களை இணைக்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பேஸ்புக் பயனர் அக்லக் கான், இந்தப் படத்தை வெளியிட்டு, ஒரு உள்ளூர்மயமாக்கப்பட்ட மோதலில் பலரைக் கொல்ல முடிந்தால், ஒரு போரில் சீனா எத்தனை இந்திய வீரர்களைக் கொன்றுவிடும் என்று கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் பேஸ்புக்கில் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தப் படம் உண்மையானதா அல்லது போலியானதா என்று பலரும் யோசிக்க ஆரம்பித்தனர். இதன் முடிவில் தற்போது கூற்று ஒன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து கூகுளில் இருக்கும் தலைகீழ் பட தேடலை பயன்படுத்தி ஆராய்ந்து பார்த்ததில் இந்த புகைப்படம் கடந்த 2015ல் எடுக்கப்பட்டது என்றும் நைஜீரியாவில் இருந்து வெளிவந்தது என்றும் தெரியவந்துள்ளது.நாகாலாந்து என்ற பெயரில் இருக்கும் வலைப்பதிவில் இந்த புகைப்படம் இடம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படம் ஆனது கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போகோ ஹராமாவால் கொல்லப்பட்ட 105 சிப்பாய்கள் இவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அந்நாட்டு இராணுவத்தால் ரகசியமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் சமீபத்தில் நடைபெற்ற இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் என்று வெளியிடப்பட்டது போலியான தகவல் என்று தெளிவாகியுள்ளது.