ஆணின் அந்த இடத்தில் கூடு கட்டி குடியேறிய தேனீக்கள்! வைரலாகும் வீடியோ உள்ளே!

டெல்லி: ஆணின் பின்புறத்தில் தேனீக்கள் ஓட்டியபடி இருக்கும் வீடியோவை கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.


மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதுதொடர்பாக, ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தேனீக்கள் ஒளிந்திருக்கும் இடத்தை பாருங்கள். இது நிஜமாகவே எதிர்பாராத இடம்தான். இப்படியான விசயம் நாகாலாந்தில் மட்டும்தான் நடக்கக்கூடும். நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளியிட்ட வீடியோ இது,  என்று கூறியுள்ளார். 

அதன்கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், ஆண் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்தபடி நிற்கிறார். அவரது பின்புறத்தில் பேண்ட் மீது அப்படியே தேனீக்கள் கூட்டமாக மொய்த்தபடி நிற்கின்றன. இதனைப் பார்த்து பலரும் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட நபரை பார்க்கும்போது, பேண்டிலேயே ஆய் போனது போல உள்ளது என்றும், அவரது குசு தேன் மல்லிப் பூ போல வாசம் வீசியதால் தேனீக்கள் அங்கே வந்து அப்பியிருக்கும் என்றும் நாராசமான கமெண்ட்களை பலரும் பகிர்கின்றனர். இதன்காரணமாக, கிரண் ரிஜிஜூவின் ட்விட்டர் பக்கம் அதகளப்பட்டு வருகிறது.