தொழிலாளர்களுடன் புறப்பட்ட லாரி..! எதிரே அதிவேகத்தில் வந்த டிரக்..! நொடிப் பொழுதில் பறிபோன 14 உயிர்கள்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் புறப்பட்ட லாரி எதிரே வந்த டிரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 14 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வைரஸின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ‌ இதனை அடுத்து மற்ற மாநிலங்களிலிருந்து வேலைக்காக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் ரயில்சேவை அளித்த போதிலும் பயணச்சீட்டு பெறுவதற்குக் கூட தங்களிடம் பணம் இல்லாததால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் ஒரு சிலர் நடந்தே தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும் சிலர் வழியில் கிடைக்கும் லாரி போன்ற வாகனங்களை பயன்படுத்தி ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறாக செல்லும்பொழுது தினம்தோறும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது வருவதை நாம் தொடர்ச்சியாகக் பார்த்து கொண்டு வருகிறோம். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. 

70 புலம்பெயரும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மகாராஷ்டிராவில் இருந்து உத்தர பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஆனது மத்திய பிரதேசத்தை அடைந்த பொழுது எதிரே வந்த அதிவேகமாக இயக்கப்பட்ட டிரக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாரியில் பயணித்த புலம்பெயரும் தொழிலாளர்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரியில் பயணம் செய்த சுமார் 55 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியின் மீது மோதிய ட்ரக்கில் ஓட்டுனரும் கிளீனரும் மட்டும்தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது இன்று அதிகாலை மூன்று மணியளவில் நடைபெற்றதாக உள்ளூர் போலீசார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களுக்கு தெரிவித்திருக்கிறார். என மேலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.