ரயில் நிலைய கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி..! பசிக்கொடுமை காரணம்?

மும்பையில் தினக்கூலி தொழிலாளராக வேலை பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளியான மோகன்லால் ஷர்மாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில்நிலையத்தில் இருக்கும் கழிவறையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய உணவும் குடிநீரும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிச் செல்லலாம் என்று முடிவெடுத்து நடந்தோ சைக்கிள் மூலமாகவோ ரயில்கள் மூலமாகவும் சென்றடைகின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும் வழியில் போதிய உணவும் குடிநீரும் இல்லாமல் கடும் வெப்பத்தில் சிக்கி பலரும் உயிரிழக்கின்றனர். தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்களை நாம் பார்த்த வண்ணம் உள்ளோம்.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தின கூலி தொழிலாளியாக பணியாற்றியவர் மோகன்லால் ஷர்மா. இவருக்கு வயது 38. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளமையால் இவருக்கு வேலை ஏதும் சரியாக இல்லாத காரணத்தால் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்து ரயிலில் ஏறி இருக்கிறார். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் ஆனது உத்திரபிரதேசம் ஜான்சி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. ரயில் நடைமுறைக்கு அந்த நின்றதும் பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு இறங்கிய பின்பு அதனை சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது வழக்கம்.

அப்படியாக பணியாளர்கள் ரயிலை சுத்தம் செய்துள்ளனர். அப்போது செய்து அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ரயிலில் இருக்கும் கழிவறை ஒன்றில் சடலமாக ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டது. விசாரணையில் அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளி என்றும் அவரது பெயர் மோகன்லால் ஷர்மா என்றும் கண்டறியப்பட்டது. மேலும் அவர் இறந்து பல நாட்களாக ரயிலின் கழிவறையிலேயே இருந்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த மோகன்லால் சட்டைப்பையில் 28 ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு சோப்பு மற்றும் புத்தகங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து மோகன்லாலின் உடலை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மோகன்லால் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர் கண்ணையா உடலைப் பார்த்து உறுதி செய்திருக்கிறார். மேலும் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளியான மோகன்லால் சர்மாவுக்கு குரோனா தொற்று இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்துவிட்டு உடலை ஒப்படைப்போம் என்று காவல்துறை அதிகாரிகள் கண்ணையாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.