19 வயதில் கர்ப்பம்..! வீட்டில் தகராறு..! பெற்ற தந்தையின் மார்பில் கத்தியால் குத்தி கொன்ற இளைய மகள்! கல்பாக்கம் பயங்கரம்!

பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் தந்தையை கொலை செய்துள்ள சம்பவமானது கல்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்பாக்கத்திற்கு அருகே வடபட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர். சேகரின் வயது 48. இவருடைய மனைவியின் பெயர் ஏகவள்ளி. ஏகவள்ளியின் வயது 38. இத்தம்பதியினருக்கு மொத்தம் 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. நடு மகளான நந்தினிக்கு ஓராண்டுக்கு முன்னர் அருணகிரி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் நந்தினி சென்ற ஆண்டு இறுதியில் கருவுற்றார். மேலும் தன்னுடைய முதல் பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

அடிக்கடி சேகர் மற்றும் ஏகவள்ளி ஆகியோர் இடையே தகராறு ஏற்படுவதுண்டு. வழக்கம்போல சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குறிக்கிட்ட நந்தினி தன்னுடைய தந்தை சேகரை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் சேகர் மற்றும் நந்தினி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த நந்தினியை காய்கறி வெட்டுவதற்காக அருகிலிருந்த கத்தியை எடுத்து சேகரின் இடது மார்பில் பலமாக குத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக சேகரை கூவத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த நந்தினியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கல்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.