பாயம்மா பாட்டி வந்துட்டாங்க! தள்ளாத வயதிலும் சென்னை டிராஃபிக்கை ஒழுங்கு படுத்தும் சகூர் பானு! நெகிழவைக்கும் பின்னணி!

சென்னையின் முக்கிய இடத்தில் நடுத்தர வயது பெண்னொருவர் போக்குவரத்தை சீர் செய்துவரும் சம்பவமானது மக்களை கவர்ந்துள்ளது.


சென்னை தரமணியில் மாணவர்களும், ஊழியர்களும் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த சகூர் பானு என்ற பெண் தனியாளாக போக்குவரத்து நெரிசலை சீர்செய்து வருகிறார்.

மகாத்மா காந்தி 100 அடி சாலையில் போக்குவரத்து காவலரை போன்று கையில் ஸ்டாப் போர்டுகளை வைத்துக்கொண்டு போக்குவரத்தை சீர் செய்து வருகிறார். சகூர் பானுவை அப்பகுதி மக்கள் அன்புடன் "பாயம்மா" என்று அழைக்கின்றனர். இவர் அப்பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் மாலை நேரங்களில் அங்குமிங்கும் பறந்து கொண்டு, விசில் ஊதி சுறுசுறுப்பாக போக்குவரத்தை சீர் செய்து வருகிறார். இவருடைய பொது சேவையை பார்த்து வரும் அப்பகுதி மக்கள் இவரை பாராட்டிய வண்ணமுள்ளனர்.