எனக்கு 97.. உனக்கு 87..! மனைவி உயிரிழந்த சில நிமிடங்களில் உயர் நீத்த கணவன்..! ஒரே நேரத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலம்! நெகிழ்ச்சி சம்பவம்!

திருமணம் ஆகி 73 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவி காலமானதை அடுத்து அவரை பிரிய முடியாமல் கணவரும் உயிரிழந்த சோகமான, நெகிழ்ச்சி சம்பவம் சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றுள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூரில் 73 ஆண்டுகளுக்கு முன்னர் பச்சமுத்து என்பவர் குள்ளம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதாவது 1947ம் ஆண்டு தனக்கு 23 வயது இருக்கும்போது குள்ளம்மாள் என்பவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து கரம்பிடித்தார். அவர் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட பச்சமுத்துவுக்கு 96 வயதான நிலையில் பேரன் பேத்திகளுடன் காலத்தை கடத்தி வந்தார்.

சண்டை, சச்சரவு இன்றி மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த தம்பதியை அப்பகுதி மக்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் பார்ப்பர். சுப நிகழ்ச்சிகளில் அவர்களிடம் ஆசிர்வாதம் பெறாமல் யாரும் நிகழ்ச்சியை நடத்த மாட்டார்கள். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் பச்சமுத்துவின் மனைவி குள்ளம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. இதனால் வேதனை அடைந்த பச்சமுத்து அழுது கொண்டே இருந்தார்.

73 ஆண்டுகளாக தனது சுக, துக்கத்தில் பங்கேற்ற மனைவி பிரிந்துவிட்டாரே என வேதனையில் ஆழ்ந்தார். நேற்று குள்ளம்மாளின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பச்சமுத்துவும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள், பேரன்கள் என அனைவரும் கதறி அழுதனர். பின்னர் 2 பேரின் உடலையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று மேச்சேரி அமரத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனர்.

காபி போட்டு தரவில்லை என மனைவியை விவாகரத்து செய்யும் கணவன்கள், பட்டுப்புடவை வாங்கித் தரவில்லை என கணவனை விவகாரத்து செய்யும் மனைவிகள் என சமூகத்தில் 60 ஆண்டுகளாக வாழ்ந்த மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் கணவர் உயிரிழந்த சம்பவதை பொறுத்தவரை பச்சமுத்து, குள்ளம்மாள் தம்பதியும் ஒரு ஷாஜகான்-மும்தாஜ் தம்திபோல்தான்.