மயங்கி சரிந்த குழந்தை..! தலையில் இருந்து உடம்பெல்லாம் ரத்தம்..! நடுரோட்டில் கதறிய தாய்! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்!

21-வது மாடியிலிருந்து உலோகத்துண்டு சாலையில் நடந்து சென்ற குழந்தையின் தலையில் விழுந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டின் கிழக்கு திசையில் ஜெஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட டோங்யாங் நகரில் ஜாங் லிங்ஃபாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 2 குழந்தைகளையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று இளைய குழந்தை சாலையில் மயங்கி விழுந்துள்ளது. தலையிலிருந்து ரத்தம் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. உதவி கேட்டு தாய் சாலையில் கதறி அழுதார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை அபாய கட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சாலையோரத்தில் ஒரு வீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது ஜு என்ற 29 வயது தொழிலாளி 21-வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தவறுதலாக தன்னுடைய கையிலிருந்த உலோக பைப்பை அவர் தவறவிட்டுள்ளார்.

அந்த பைப்பானது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து ஜு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.