விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையின் மகத்துவம் இதோ!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் விநாயகருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து அதனை அவருக்கு நிவேதனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் விநாயகருக்கு பிடித்த மிகவும் பிரசித்தி பெற்ற உணவாக கொழுக்கட்டை கருதப்படுகிறது. இதற்கான காரணமாக கொழுக்கட்டையின் தத்துவத்தை கூறுகிறார்கள் நம் முன்னோர்கள்.

கொழுக்கட்டை பார்ப்பதற்கு வெளியில் வெள்ளை நிறத்திலும் இரண்டு கூர்மையான பக்கங்களையும் உள்ளே இனிப்பான பகுதியையும் கொண்டிருக்கும். இந்த கொழுக்கட்டையில் உள்ள இரண்டு கூர்மையான பக்கங்கள் விநாயகரின் கூர்மையான புத்தியையும் , வெளிப்புறத்தில் உள்ள வெள்ளைப்பகுதி விநாயகரின் தூய்மையான உள்ளத்தையும் , கொழுக்கட்டையின் உள்ளே வைக்கப்படும் இனிப்பு பகுதி எப்போதுமே விநாயகர் நமக்கு இனியவனே அருள்வார் என்பதைப் பற்றியும் உணர்த்துகிறது. இதுவே கொழுக்கட்டையின் தத்துவம் ஆக நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.