விஜய்க்கு மேஜிக் கத்துக் கொடுத்தேன்! இன்னும் சம்பளம் தரல! கதறும் மெர்சல் மேஜிக் மேன்!

கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம்தான் மெர்சல்.


தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கினார் . இத்திரைப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது . குறிப்பாக இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கிராமத்து இளைஞனாகவும் மருத்துவரா கவும் மேஜிக் மேனகாவும் நடித்திருப்பார். இந்த மூன்று வேடங்களில் தளபதி விஜய் மேஜிக் மேனாக நடிப்பதற்காக மிகப்பெரிய சவால்களை சந்தித்துள்ளார் . இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனுடைய பிரதிபலிப்பு மெர்சல் திரைப்படத்தில் நன்றாக தெரிந்தது என ரசிகர்களும் நடிகர் விஜய்யை மிகவும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விஜய்க்கு உலகில் மிகச்சிறந்த மேஜிக் மேன்கள் இணைந்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியளித்தவர்களில் ராமன் ஷர்மாவும் ஒருவராவார். இவர் சமீப காலமாகவே மெர்சல் திரைப்படத்தில் தான் செய்த பணிக்கு இன்னும் நிர்ணயித்த சம்பளத்தை பெறவில்லை என்று கூறி வந்திருந்தார். இதனை குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பலமுறை கேட்டு இருக்கிறார் . ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை . படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு தொடர போவதாக கூறுகிறார். 

தான் கஷ்டப்பட்டு பணியாற்றிய மெர்சல் திரைப்படத்திற்கான சம்பள பாக்கி 4 லட்சத்தை பெறாமல் விடப்போவதில்லை என்றும் அவர் கூறிவருகிறார் . தன்னுடைய வழக்கறிஞருடன் ஆலோசித்து இதனுடைய அடுத்தகட்ட முடிவில் இறங்கப் போவதாகவும் ராமன் ஷர்மா சமீபத்தில் வெளியான வீடியோவில் குடி கூறியுள்ளார்.