பாலியல் துன்புறுத்தல் என்பது வழக்கமான ஒன்று! பிரபல நடிகை போட்ட அணுகுண்டு! அதிர்ச்சியில் திரையுலகம்!

பெண்களின் வாழ்வில் பாலியல் துன்புறுத்தல் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாக, நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.


இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும், பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பலரும் #MeToo என்ற பெயரில் அவ்வப்போது புகார் தெரிவிப்பது வழக்கமாகும். இதன்படி, பாலிவுட்  நடிகை பிரியங்கா சோப்ரா இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உலக மாநாடு 2019ல் பேசியபோது, பிரியங்கா சோப்ரா இதுதொடர்பாக கூறியது பின்வருமாறு:

பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் வாழ்வில் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டால், அதை எளிதில் முறியடிக்க முடியும். ஆண்கள் பெரும்பாலும், ஆண்களாகவே இருப்பார்கள். அதை நாம்தான் புரிந்துகொண்டு, சரியான இடத்தில் அவர்களை முறியடிக்க வேண்டும்.

நமக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை, நாம்தான் சமாளிக்க வேண்டும். அதற்கு நம்மிடையே ஒற்றுமை மிக அவசியம். அப்படி இருந்தால், ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு நாம் அடிமையாக வேண்டிய தேவை ஏற்படாது. #MeToo பிரசாரம் காரணமாக, தற்போது ஆண்களிடையே சற்று மிரட்சி ஏற்பட்டுள்ளது. அதை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்களிடையே பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிந்தனை படிப்படியாக, தற்போதுதான் ஏற்பட தொடங்கியுள்ளது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.