இளைஞனின் ஆசனவாய்க்குள் சொறுகி இருந்த ஸ்க்ரூ டிரைவர்..! ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! எப்படி தெரியுமா?

ஆசனவாயுவிற்குள் ஸ்க்ரூட்ரைவர் புதைந்திருந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் அமைந்துள்ளது. இங்கு 46 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் மாத்திரைகளை சரிவர சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்தனர். அதில் அவருடைய ஆசனவாயுவின் வழியாக ஸ்க்ரூட்ரைவர் செலுத்தப்பட்டிருந்ததும், அது அவருடைய சிறுகுடலை சேதப்படுத்தி இருந்ததையும் மருத்துவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுகுடல் சேதமடைந்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாலியல் இன்பத்திற்காக அவர் இத்தகைய செயலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அந்த மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது‌.