மூச்சுத் திணறல்னு வந்த இளைஞன்..! பரிசோதித்து பார்த்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பூட்டை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா குமார் என்பவர் ஆவார். 22 வயதாகும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் எப்போதும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.

இன்னிலையில் ஜிதேந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பூட்டை எடுத்து விழுங்கி விட்டார். இதனையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் உண்டாகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் . ஸ்கேன் செய்து பார்த்தபோது ஜிதேந்திராவின் தொண்டையில் பூட்டு சிக்கிக் கொண்டு இருப்பதாகவும் அதனை உடனடியாக அந்த இடத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முதலில் ஜிதேந்திராவிற்கு எண்டோஸ்கோப்பி மூலம் பூட்டை நீக்குவதற்கு மருத்துவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து தொண்டையில் அறுவை சிகிச்சையின் மூலம் பூட்டை வெளியே எடுக்க முயற்சித்தனர்.

சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்பு மருத்துவர்கள் வெற்றிகரமாக ஜிதேந்திரா தொண்டையில் இருந்த பூட்டை வெளியே எடுத்தனர். தற்போது ஜிதேந்திரா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.