நடுரோட்டில் பெண் ஒருவர் வயிற்றுக்குள் இருந்து அப்படியே வெளியே விழுந்த குழந்தை..! விருதுநகரில் பகீர் சம்பவம்!

விருதுநகர் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி நடந்து சென்ற நிலையில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு நடு ரோட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.


சாத்தூர் அருகே உப்பத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தில் 35 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் நடந்து வருவதைப் பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் சாந்தி அவரை பத்திரமாக மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பிரசவ சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை அடுத்து பிரசவ வார்டில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பொழுது யார் கண்ணிலும் படாமல் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பினிப்பெண் மருத்துவமனையை விட்டு வெளியேறி நடந்து சென்றுள்ளார். விருதுநகரில் அமைந்திருக்கும் கால்நடை மருத்துவமனை சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பினிப்பெண் நடந்து சென்ற பொழுது திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு நடு ரோட்டிலேயே பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 

உடனே இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து வரவழைத்துள்ளனர். பின்னர் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குழந்தையையும் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் வைத்து தாய்க்கும் குழந்தைக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மருத்துவமனையை விட்டு எப்படி அந்த பெண் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தார் என்று விசாரணை செய்யப்பட்டது.

அந்த மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டில் போதுமான அளவு பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.