என்னடி விளையாடுறியா? பெண் எஸ்ஐயை சுட்டுக் கொன்றுவிட்டு ஆண் எஸ்ஐ செய்த பகீர் செயல்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

டெல்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்று விட்டு ஆண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் ரோஹிணி காவல் நிலையத்தில் பிரீத்தி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் பீதியில் இருந்தனர்.

இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் ப்ரீத்தியின் கொலைக்கு யார் காரணம் என்று விசாரித்து போது போலீசார் மற்றொரு ஆண் காவல் உதவி ஆய்வாளர் தீபான்சு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அவரை தேடிவந்த போலீசார் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற பகுதியில் திபான்சு துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்தார் என்று தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவர்களின் சடலங்களை கைப்பற்றி கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.