சட்டப்பேரவையின் கூட்டம்! தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி பம்பரமாக சுற்றினார்! அமைச்சர்கள் பாராட்டு!

தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம், கொரோனா தொற்றினால் மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் இன்று கூடியது.


இன்று கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியபோது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ’கொரோனா பாதிப்பில் முதல்வர் மிகவும் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட்டுள்ளார். அதனால், முதல்வர் எடப்பாடியார் மன்னாதி மன்னன். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே சிறப்பாக செயல்பட கூடிய நம்பர் 1 முதல்வர், நல்லாட்சியால் தமிழகத்தை உயர்த்த வந்த விவசாயி” என்று புகழ்ந்து பேசினார். 

அடுத்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’உலகமே கொரோனாவால் முடங்கியிருந்த போதும் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி பம்பரமாக சுற்றினார். மேலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார்’ என்றார், அமைச்சர் செங்கோட்டையன். 

இவரைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசுகையில், 'இன்றைய ஆட்சியில் கோடை காலமே தெரியாத அளவிற்கு மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது’ என்று பாராட்டினார்.