இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் அவர்களின் மனைவி மீரா ராஜ்புத் நிகழ்ச்சி ஒன்றில் அணிந்து வந்த உடையானது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
பேண்ட் போட மறந்து வந்த பிரபல நடிகரின் மனைவி? வைரலாகும் புகைப்படம்! யார் தெரியுமா?
சமீபத்தில் வெளியான கபீர்சிங் திரைப்படத்தின் மூலம் ஷாகித் கபூர் ஒரு மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளார் . இது ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக ஷாகித் கபூருக்கு அமைந்தது. இந்நிலையில் ஷாகித் கபூரும் அவரது மனைவி மீரா ராஜ்புத் இணைந்து ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மீரா ராஜ்புத் அணிந்து வந்த உடையானது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
பொதுவாகவே மீரா ராஜ்புத் எப்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்துபவர். அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற மீரா ராஜ்புத் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விழாவில் பங்கேற்ற மீரா ராஜ்புத் சிவப்பு நிறத்தில் பிளேசர் ஒன்றை அணிந்திருந்தார். கீழே மிகவும் குட்டையான டிரவுசர் அணிந்து இருந்தமையால் சிவப்பு நிற பிளேசர் ஆல் மறைக்கப்பட்டிருந்தது . ஆகையால் அவர் பேண்ட் போடாத வண்ணம் அந்த உடை காட்சியளித்தது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மீரா ராஜ்புத் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குகிறார் என்று கூறினார். மேலும் சில நெட்டிசன்கள் மீரா பேண்ட் அணிய மறந்து விட்டாரோ? என்றும் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.