நான் எப்போதும் உனக்கானவள்! நீ எப்போதும் கூப்பிட்டாலும் வர ரெடி! மீரா மிதுன் பகீர் ஆஃபர்! யாருக்கு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 இல் பட்டம் வென்ற முகேனின் தந்தை இறந்ததற்கு நடிகை மீரா மிதுன் முகேன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆறுதல் கூறியிருந்தார்.


கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர் முகேன் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேனின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு முகேன் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மகனின் தந்தை இறந்ததற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணமிருந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுன் அவரும் முகேனும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும் அதில் மீராமிதுன் தைரியமாக இரு முகேன் எனவும், இந்த உலகத்தில் அனைத்தும் தெய்வத்தின் காரணமாகத்தான் நடக்கிறது.உன்னுடன் எப்போதும் நான் இருப்பேன் . நீ எப்போது வேண்டுமானாலும் எனக்கு கால் செய்யலாம். எட்வினிடம் என்னுடைய நம்பர் உள்ளது. நீ வெற்றி பெற பிறந்தவன் எனவும் நடிகை மீரா மிதுன் அதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுன் சக போட்டியாளரான முகேன் மீது பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.