காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்த மெடிக்கல் ஷாப் ஓனர்! சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்த குழந்தை! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

2 வயது குழந்தைக்கு தவறான மாத்திரையை கொடுத்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுடெல்லியில் ஷாதாரா ஜிடிபி என்கிளேவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 வயது குழந்தை தன் பெற்றோருடன் வந்துள்ளார். இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. 

அப்பகுதியில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் குழந்தையின் தாயார் மாத்திரை வாங்கி சென்றார். குழந்தைக்கு மாத்திரையை கொடுத்த பின்னரும் உடல்நலம் முன்னேறவில்லை. இதனால் தாயார் மீண்டும் அந்த குழந்தையை அதே மெடிக்கல் ஷாப்புக்கு அழைத்து சென்றுள்ளார். 

அப்போது அந்த மருந்தகத்தின் உரிமையாளர் குழந்தைக்கு ஏதோ ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடனே குழந்தை ரத்தவாந்தி எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் தாயார் பயந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக குழந்தையின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மருந்தகத்தின் உரிமையாளரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.