ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் பால்... தாய்ப்பாலுக்கு இணையான பால்... எதுவென தெரியுமா?

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.


பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....! ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான், தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புக்களை புதுப்பிக்கும். தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும். தேங்காய் பால் ஆண்மையைப் பெருக்க வல்லது. இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள். அவ்வளவு ஆரோக்கியம். காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை!!!