ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ,அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் விரைவில் திரைக்கு வெளிவர இருக்கும் பிகில் திரைப்படத்திற்கு எதிராக கோவையில் இறைச்சி வியாபாரிகள் சார்பாக போராட்டம் வெடித்துள்ளது.
பிகில் படத்தை வெளியிட விடமாட்டோம்! விஜய்க்கு எதிராக இறைச்சி வியாபாரிகள் கொந்தளிப்பு!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_11612_1_medium_thumb.jpg)
பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் இறைச்சி வெட்டும் கட்டை மீது கால் வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது போல போஸ் கொடுத்திருப்பார் .
இறைச்சி வெட்டும் கட்டை மீது விஜய் அந்த புகைப்படத்தில் கால் வைத்துள்ளதால் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என இறைச்சி வியாபாரிகள் கோவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
மேலும் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து கோவையில் அவர்கள் போராட்டம் நடத்தினர் . அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தையும் வெளியிட விடமாட்டோம் எனவும் அவர்கள் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பிகில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . சில நாட்களுக்கு முன்னர்தான் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சம்பவமானது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .