உங்கள் ஆன்மிக நிலை எந்த அளவில் இருக்கிறது? இதோ முதிர்ச்சிக்கான அளவுகோ!

ஆன்மீக நிலை என்பது பல விஷயங்களைப் பொருத்தது.


ஒருவனின் ஆன்மீக நிலையின் முக்கிய அளவுகோல் என்னவென்றால் அவரின் ஆத்மாவை சுற்றி கருமையாக படர்ந்துள்ள அகம்பாவம் எந்த அளவு நீக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் ஆத்மாவுடன் எந்த அளவு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதும்தான். 

ஒருவரின் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்போது இறைவனின் குறுக்கீட்டை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உணர முடிகிறது; அதனால் இறைவனிடம் அதிக அளவு சரணாகதி செய்ய முடிகிறது. சரணாகதி நிலையை ஒருவர் அடையும்போது இறைவன் அவர் மூலமாக இயங்கத் துவங்குகிறான்.

இந்த இறை தத்துவம் அதிகரிக்கும் விகிதாசாரத்தில் அவரிடம் வெளிப்பட ஆரம்பிக்கிறது; அவரும் அவரை சுற்றி உள்ளோரும் இறைவனின் தெய்வீக சக்தி பிரவாஹத்தை அவருள் உணர ஆரம்பிக்கின்றனர். 

ஆன்மீக முதிர்ச்சி என்பது கீழ்க்கண்ட குணங்களை கொண்டதாகும்: 

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது  

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது  

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்  

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.  

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 

10. மன அமைதியை அடைதல். 

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.