பிராத்தனையின் உண்மையான பொருள் என்ன – ஓஷோ விளக்கம்

நீங்கள் இதுவரை செய்து வருகின்றன பிரார்த்தனை வெறும் போலி . பல லட்சம் கோயில்களும் சர்ச்களும். இதைப் போன்ற மக்களைத்தான் தயாரித்து கொண்டும் இருக்கின்றன.


அவர்களது பிரார்த்தனை நிச்சயமாக உன்மையானது அல்ல. ஏனெனில் இதில் ஏதாவது ஒரு வேண்டுகோள் இல்லாமல் இருக்காது. இதுவரை அடைந்ததற்கு அவர்கள் ஒருபோதும் நன்றி சொல்ல மாட்டார்கள். அவர்கள் தங்கள் பிரார்த்தனையின் மூலம் தாங்கள் ஒரு பிச்சைக்காரன் இன்னும் சொல்லப் போனால்.

நன்றியற்ற பிச்சைக்காரன் என்று தெளிவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்த கீழ்த்தரமான நன்றி கெட்ட செயலை எல்லா மதத்தினரிடமும் பொதுவாகக் காணலாம். எதைப் பற்றியாவது ஒரு குறை, மிக அற்பமாக சொல்லிக்கொண்டு, சிறு குழந்தைகள் போல், எனக்கு அது வேண்டும். இது வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டே இருப்பார்கள்

இவர்கள் வீணே தங்கள் நேரத்தை ஒன்றுக்கும் உதவாமல் செலவிடுகிறார்கள். அவர்களுக்கு பிரார்த்தனையின் உண்மையான அர்த்தம் கூட புரியவில்லை. அது வார்த்தையில் இல்லை. அவர்களே பிரார்த்தனை மயமாக உள்ளத்தை உணரவேண்டும்.

இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும். உதாரணமாக மரம் பச்சை பசேல் என்று இருப்பதற்கும், மழை பொழிந்து. இந்த பூமியின் தாகத்தைத் தீர்ப்பதற்கும், நீங்கள் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் அந்தப் பேருந்தன்மை எல்லோருக்கும் வேண்டும் முதல் மழையில் நனையும் பூமி ஒரு வாசனையை வெளியே.

அது அந்த பூமி இறைவனுக்கு செலுத்தும் நன்றி. பிறகு மரங்கள் பசுமையாகி, பல லட்சம் பூக்களைப் பூப்பது, கனிகளை தருவது எல்லாம், அந்த பூமி செய்யும் நன்றி செயல் இதைப் போலத்தான் உங்கள் பிரார்த்தனையும் அமையவேண்டும். உங்கள் பிரார்த்தனை அன்பு மயமாகவும், நன்றி அறிவித்தலாகவும் இருக்க வேண்டும்.

இப்படிச் செய்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் முறை இடுதல், குறை சொல்லுதல் போன்றவற்றை மறந்துவிடுவான் பொறாமைப்படுதலை விட்டு விடுவான். அவன் முழுக்க நன்றியுடைய வனாக மாறும்பொழுது, தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்பதையே மறந்து விடுவான், உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும் நீங்கள் கேட்காமலே கிடைத்தவைதான்.

அவன் வெறும் வரவேற்பாளனாக மட்டும், தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தாலே போதும், அவள் அன்பு மயமாக, பிரார்த்தனை மயமாக வெறும்மனே இருந்தால் போதும்.

நீங்கள் எந்த அளவுக்கு பெருந்தன்மையாக இதுவரை கிடைத்தற்கு நன்றியுடையவர்களாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மேலும் மேலும் இயற்கையின் அன்பளிப்பை வாங்கத் தகுதி படைத்தவர்களாவீர்கள் சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் கேட்காமலே, மேலும் மேலும் எல்லாம் உங்களை வந்தடையும்.