கோவில் பிரகாரத்தை ஏன், எப்படி, எதற்கு சுற்றி வர வேண்டும் தெரியுமா?

கோவிலுக்கு சென்றால் நாம் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம்


கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை அல்லது ஐந்து முறை பிரகாரங்களை வலம் வர வேண்டும். மூவகை உடம்பையும், ஐந்து வித கோசங்களையும் கடந்து இறைவனை வணங்கு என்பதை இது நினைவூட்டும். 

கோயில் பிராகாரங்களைக் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும். பகலில் வலம் வந்தால் விருப்பமளிக்கும். மாலையில் வலம் வந்தால் எல்லாப் பாவங்களும் போகும். அர்த்தசாமத்தில் வலம் வந்தால் மோட்சம் கிட்டும்.