விரதம் இருப்பவர்கள் ஏன் உணவு சாப்பிடுவதில்லை தெரியுமா? ஆன்மிகத்துக்குப் பின்னே அற்புத அறிவியல்!

உரிய முறையில் வழிபாடு செய்தலே" விரதம் என்பதன் பொருளாகும்.


ஒருவர் உணவருந்தாமல் விரதம் இருந்து தேவையற்ற சிந்தனைகளை எண்ணத்தில் ஓடவிட்டால் அதனால் எந்த பலனும் நமக்கு கிடைக்காது. விரதம் இருப்பவர்கள் அந்த ஒருநாள் மட்டும் இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபித்துக்கொண்டும், மனதில் நினைத்துக்கொண்டும் இருப்பது சிறந்தது.

மாதம் ஒருமுறை விரதம் இருப்பதால் நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் விரதம் இருப்பதை எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். இது சரியா? விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்தால் கோபம் வரும். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்.

விரதம் இருக்கும் அந்த நாளில் மனதிற்கும், உடலிற்கும் ஓய்வளிக்க வேண்டும். அதற்காக நாள் முழுவதும் பட்டினி இருக்கக்கூடாது. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம். சிலர் விரதம் இருக்கிறேன் என்று எதையும் சாப்பிடாமல் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பார்கள்.

இது தவறான முறையாகும். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கிறேன் என்று கூறுவார்கள். இது சரியானது அல்ல. இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும். பல நோய்கள் வரக் காரணமாக அமையும்.

விரதம் இருக்கும் நாளில் எண்ணெயில் செய்யப்படும் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது. விரதம் இருக்கும் நாளில் வயிற்றை வெற்றிடமாக வைத்துக் கொள்ளாமல், ஏதேனும் பழங்கள், பழச்சாறு, நவதானியங்கள், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள், மதியவேளை உணவை மட்டும் அருந்திவிட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் பால், பழம் சாப்பிடுவது தவறில்லை.

யாரெல்லாம் விரதத்தை தவிர்க்க வேண்டும்?: நோயாளிகள் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். சிறு பாலகர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். மாதவிலக்கான பெண்கள் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்து 48 நாட்களான பிறகே விரதம் கடைபிடிக்கலாம்.

கர்ப்பிணிகள் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்கக்கூடாது. குடல்புண் உள்ளவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.