எட்டெழுத்து மந்திரத்தின் அற்புதம்! அருள் மழை பொழியும் ஓம் நமோ நாராயணா!

நாராயணா என்னும் மந்திரத்தை நாவால் உச்சரித்து, மனத்தால் தியானித்து இறைவனோடு இரண்டற கலந்தவர் இராமானுஜர் ஆவார்.


நமோ_நாராயணாய இது திருஎட்டெழுத்து அல்லது அஷ்டாக்ஷர_மகா #மந்திரமாகும். இது எட்டு எழுத்துக்களையும்,மூன்று வார்த்தைகளையும் கொண்டது. திருமங்கையாழ்வாரும், நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் நலம் தரும் சொல்லை நான் #கண்டு_கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று பாடுகிறார்.

ஓம் நமோ நாராயணா என்னும் எட்டு எழுத்து மந்திரமே வைணவர்களின் நாவில் என்றைக்கும் வேதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அ + உ + ம் = ஓம் எனலாம் இதில்,அ - இறைவன் காரணமாயிருக்கும் தன்மையையும் உ - இறைவனின் காக்கும் தன்மையையும் ம் - இறைவனின் தலைமைத் தன்மையையும் குறிக்கும். அது போல, நாரா - அழியாய் பொருள்.அயண - இருப்பிடமாய் உள்ளவன் ஆய - எல்லா விதமான தொண்டுகளையும் செய்யும் கடமையுடவனாய் இருப்பவன் எனப்பொருள்படும்.

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.

நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது. நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடை யவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.

நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார். இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர். நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும்.

அழிவு, நிலைப்பொருள் அத்தனைக்கும் இருப்பிடமாய் உள்ள நாராயணனுக்கு அனைத்துத் தொண்டுகளையும் செய்யக்_கடவேன்_ஆகுக என்று வைணவர்கள் வழிபட்டு வாழ்கிறார்கள். அகவழிபாட்டில் இறை நாமத்தை உச்சரித்தல் என்பதும் உண்டு. இறைவன் தொலைவில் இருந்தாலும் பக்தர்கள் மனத்தால் தியானித்து எம்பெருமான் திருநாமத்தை உச்சரிக்கையில்,

இறைவன் அவர்கள் அருகில் வந்து துன்பத்தை நீக்குவார் என்று வைணவப் பெரியோர்கள் நம்பியே நாராயணா, கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா, இராமா என்று திருமாலின் பல்வேறு திருநாமங்களை உச்சரித்து வாழ்கின்றனர்.