பிரம்மனுக்கு முருகப்பெருமான் உரைத்த ஓம் பிரணவ மந்திரத்தின் தத்துவம் இதோ!

‘ஓம்’ என்பது அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது. தத்துவம் என்பதே உணர்ந்து அறிவதுதான்.


அனைத்து தெய்வங்களின் சக்திகளும் இந்தப் பிரணவ மந்திரத்தினுள் அடக்கம். அனைத்து வேதங்களும் மந்திரங்களும் இதனுள் அடக்கம். பிறகு, மற்ற மந்திரங்களை எதற்காகக் கடவுள் அருளினார் என்ற சந்தேகம் பலருக்கும் எழக்கூடும். காரணம், எப்படி ஒரு விதையின் மூலம் ஒரு விருட்சம் உருவாகி, அதில் தோன்றும் கனிகளிலிருந்து கிடைக்கும் விதைகளிலிருந்து எண்ணற்ற விருட்சங்கள் உருவாகின்றதோ...

அதேபோல் ‘ஓம்’ என்னும் சொல்லானது, வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் என்று அனைத்துமாக விளங்குகிறது. மரத்தின் வேரில் தண்ணீர்விட்டு மரத்தின் மூலமாகப் பலன்களைப் பெறுவதுபோல், ஒவ்வொரு மந்திரத்தின் முன்பாகவும் நாம் சொல்லும் பிரணவ மந்திரத்தின் சேர்க்கை அந்த மந்திரத்துக்குச் சக்தி கொடுப்பதாக விளங்குகிறது.

எனவே, தாங்கள் எந்த மந்திரத்தைச் சொல்வதாக இருந்தாலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைச் சேர்த்துச் சொல்லவேண்டியது அவசியம். அதன் ஆற்றலை நம்முடைய அனுபவத்தினால்தான் உணர முடியும். பிரணவம் என்பது ஆதி பொருள் ஆன இறைவன் . அவன் ஓங்காரமாக இப்ப்பிரபஞ்சம் உருவாகும் முன் , தொடக்கமாக உள்ளான். ஓங்காரம் என்பது ஓ.. ஓஎன்பது இறைவனின் ஒடுக்க நிலை .

அதன் வடிவு யாருக்கும் தெரியாது . யாரும் அதனுடன் தொடர்புகொள்ள முடியாது . பிரணவத்தை ஓ என்பதால் பயன் இல்லை .ஆதியில் ஓ வாக ஒடுக்கமாக இருந்த இறைவன் ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது. அப்பொழுது அகர , உகார நாத . விந்து என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன அதுவே ஓம் என்ற ஒலி மற்றும் ஒளி ஆனது. இப்பிரபஞ்சத்தின் முதல் ஒலியும் இறை ஒலியும் ஓம்.

இறைவன் முதலாக வெளிப்பட்டது ஒளியாக. இந்த ஓம் என்ற ஒளி வடிவ இறைவனுடன் நாம் ஓம் என்ற ஒலி எழுப்பி தொடர்புகொண்டு சக்தி பெறலாம். . இந்த முதல் ஒளியான இறைவன் மனிதனனுள் இருக்கிறான். அந்த ஒளியே அகத்தீ. இந்த அகத்தீயை நம்முள் கண்டு அதன் மூலம் இறைவனை தொடர்புகொண்டு முக்தி அடையலாம் .

இரண்டும் செய்து சக்தியும் முக்தியும் பெறமுடியும் என்பதே சித்தர் கொள்கை . நூறு கோடி மந்திரங்களுக்கும் உயிராய் இருப்பதும் ஆம் என்று உச்சரித்து பயன் தந்ததும் ஒம்காரந்தான். எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனார், பிரணவத்தின் உயர்வை உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம்கொண்டார். அதன்படி தன் மகனிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்டு உணர்வதாக ஓர் அருளாடல் நிகழ்த்தினார்.

அதன்மூலம் உலக மக்கள் அனைவரும் பிரணவத்தின் உயர்வையும் அதன் ஆற்றலையும் உணரச்செய்தார். எனவே, அனைத்து மந்திரங்களுக்கும் விதையாக விளங்கும் பிரணவமானது அனைத்து மந்திரங்களுக்கும் பிரதானமானதாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும்.