இந்து மத நான்கு வேதங்களின் பொருள் மற்றும் பயன்கள் என்ன தெரியுமா?

இந்து மதத்தில் அதி அற்புதம் வாய்ந்த ரிக் சாம அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன/


ரிக் என்றால் போற்றுதல் என பொருள்படும். ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும் இந்து தர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம் அழிவற்ற பேரழிவு பெட்டகமாக அமைந்துள்ளது. ரிக் வேதம் பல வானியல் சாத்திர உண்மைகளை கொண்டதாக இருக்கிறது

சாம வேதத்தை கான வேதம் என்றே குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம். ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக் கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்து காட்டும் வேதம் இது. சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசை வடிவில் ஒளிந்துள்ளது. ரிக் வேதம் சொல் என்றால் சாமவேதம் பாடல், ரிக்வேதம் மெய்ஞானம் என்றால் சாமவேதம் மீது உணர்வு, ரிக் வேதம் மனைவி என்றால் சாமவேதம் கணவன் என உபநிடதம் குறிக்கின்றது. சாம வேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையையும் பற்றி கூறுகிறது. சிவபெருமான் சாமகானப் பிரியர்.

யஜூர் வேதம் சடங்குகளின் வேதம் என்று கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளை பற்றிய அறிவுரைகளை வழிமுறைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள் உணர்வுகளை தட்டி எழுப்பவும் மனதை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்களே ஆகும். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல் முறைகளையும் யஜூர் வேதம் விளக்குகின்றது. ‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன. ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது. இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில் பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது. ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது. காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

அதர்வண வேதம் நான்காவது வேதமாகும். ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வன வேதம் கொண்டுள்ளது. மேலும் அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான். ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளை செய்துள்ளனர். இதனை தவறாக பயன்படுத்துவோருக்கு முடிவில் இதுவே அழிவைத் தரும்.