காசுதான் முக்கியம்! கௌரவம் இல்லை! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் வைகோ!

வைகோ


நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி என்ன சின்னத்தில் போட்டியிடுவார் என்று துவக்கம் முதலே எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ தேர்தல் ஆணையம் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று கூறியிருந்தார்.

இதனால் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரியவந்தது. ஆனால் திடீர் திருப்பமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் பேசிய வைகோ தமது வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்து மதிமுகவினரை அதிர வைத்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என்பதால் வைகோ இந்த முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டுகிட்டாள் தேர்தல் செலவை ஏற்றுக் கொள்வதாக திமுக வாக்குறுதி கொடுத்து இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தற்போதைய சூழலில் கணேசமூர்த்தி இடமும் நாடாளுமன்ற தேர்தலில் செலவிடும் அளவிற்கு பணம் இல்லை. எனவே திமுகவின் அறிவுறுத்தலின்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர்கள் செலவையும் திமுக தரப்பில் கவனித்துக் கொள்ளும் என்று சொல்கிறார்கள்.