தமிழ்நாட்டின் புதிய மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை! முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தமிழ்நாட்டில் பெரிய மாவட்டமாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களாக இரண்டாக பிரிக்கப்பட்டது. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேலும் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமாகியது.

இந்த வரிசையில் நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.