ஆரம்பிச்சுட்டாங்கப்பா, அடுத்த பஞ்சாயத்தை! அயோத்தியை அடுத்து மதுரா காசி!

ராமஜென்ம பூமியை வெற்றி கொண்டதை அடுத்து கிருஷ்ண ஜென்ம பூமி பஞ்சாயத்தை பா.ஜ.க. தொடங்க இருக்கிறது. அதன்படி, மதுராவில் உள்ள மசூதியை இடித்து விட்டு கிருஷ்ணருக்கு கோவில் எழுப்ப வேண்டும் என்பது இந்துத்துவர்களின் கோரிக்கை.


இந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்றாலும் கோரிக்கையை இவர்கள் விடுவதாக இலை. இதில், மிக முக்கியமான விஷயம் கிருஷ்ணருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மதுரா ஆலய பூஜாரிகள் அமைப்பான அகில இந்திய தீர்த்த புரோஹித மஹாசபாவின் தலைவர் மகேஷ் பாதக், "எங்களைப் பொருத்தவரை, மதுராவில் கோயில் நிர்வாகத்துக்கோ மசூதி நிர்வாகத்துக்கோ எந்த பிரச்னையும் இல்லை. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் சரி செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு சுமூகமாக இருக்கிறோம். வெளியில் உள்ளவர்கள்தான் இதை பிரச்னையாக்க முயல்கிறார்கள். அயோத்தில் நடந்த சம்பவம், மதுராவில் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

ஆனால், இங்கேயும் மசூதி இடிக்கப்படவும், அது தேர்தல் பிரசாரமாக மாற்றப்படுவதும் உறுதி என்றுதான் சொல்லப்படுகிறது.