28 மாணவர்கள்..! 28 மாணவிகள்..! ஒரே ஒரு ஆசிரியை..! வகுப்பறையில் அரங்கேறிய திக் திக் சம்பவம்! ஈரோடு பரபரப்பு!

மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 28 மாணவிகளை பிரம்பால் அடித்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே கூகலூர் என்ற இடத்தில் அரசு உதவி பெறும் காந்தி கல்வி நிலையம் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பிற்கு கணித ஆசிரியையாக சிவகாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த வகுப்பு மாணவிகளுக்கு வகுப்புத் தேர்வில் 28 மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் வகுப்பிற்கு சென்று அந்த சிவகாமி குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக 28 மாணவிகளையும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

வகுப்பு முடிந்த பிறகு அடுத்த வகுப்பு ஆசிரியை வந்த போது, மாணவிகள் வலிதாங்காமல் அழுது கொண்டிருந்தனர். அவர் நடத்திய விசாரணையில் சிவகாமி காட்டுமிராண்டித்தனமாக மாணவிகளை அடித்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நிகழ்ந்தவற்றை பள்ளி தலைமை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் கூறியுள்ளார்.

உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவிகளை கூகலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு விரைந்து வந்து சிவகாமி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சிவகாமி ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.