180 வழக்கு! 8 வருடங்கள் தலைமறைவு! கொள்ளை அடித்த பணத்தில் சினிமா எடுத்த எய்ட்ஸ் முருகன்! லலிதா ஜூவல்லரியை மொட்டை அடித்த பின்னணி!

லலிதா ஜுவல்லரி திருட்டில் மூலதனமாக இருந்த முருகன் சினிமா தயாரித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சில நாட்களுக்கு முன்னால் லலிதா ஜுவல்லரி 13 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். அப்போது மணிகண்டன், சுரேஷ் என்ற 2 நடுத்தர வயதினரை கொள்ளையில் ஈடுபட்டவர்களாக உறுதி செய்த பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பல மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக எய்ட்ஸ் முருகன் என்பவர் செயல்பட்டு வந்தார் என்பதும், அவர் சுரேஷின் தாய்மாமன் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் இன்னும் 8 பெயர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். மேலும் ஒரு ஆங்கில தொடரில் வங்கியில் திருடும் காட்சியை மையமாக கொண்டு எய்ட்ஸ் முருகன் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்.

சுவரில் கன்னம் வைத்து திருடுவது, சுவரில் துளையிட்டு திருடுவது, முகமூடி அணிந்து கொள்வது, திருடிய பின்னர் தப்பிப்பது போன்ற அனைத்தையும் அந்த ஆங்கிலத் தொடரை மையமாக வைத்துக்கொண்டு முருகன் நிர்வகித்துள்ளார்.

தங்களுடைய வாழ்க்கையின் தொடக்கத்தில் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து வந்த எய்ட்ஸ் முருகன், கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்து தன்னுடைய சீரியல் கொள்ளைகளை தொடங்கியுள்ளார். இவர் மீது கர்நாடகாவில் மொத்தம் 180 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டில் ஜாமீன் பெற்ற பிறகு ஹைதராபாத் சென்று அங்கு தன் கைவரிசையை காட்டியுள்ளார்.

திருடிய பணத்தில் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள மக்களுக்கும் பாதியை தந்துவிடுவதும், அங்கு வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு காப்பகம் நடத்தி வருவதும் என்று தன் பாவத்தை கழிக்க முயற்சித்துள்ளார்.

மேலும் திருடி சேர்த்த பணத்தில் தெலுங்கு மொழியில் 50 லட்சம் முதலீட்டில் பாலமுருகன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் தன்னுடைய உறவினரான சுரேஷ் என்பவரை நடிக்க வைத்தார். அதன்பின் ஒரு முறை சிறைக்கு சென்று வெளியே வந்தவுடன் ஆத்மா என்ற படத்தையும் எடுத்தார்.

தற்போது மிகக் கொடிய நோயின் பிடியில் சிக்கிய முருகன் மருத்துவ உதவியுடன், வேன் வேனாக ஊர்சுற்றி கொண்டிருக்கிறார். அவரை பிடிப்பதற்காக தமிழக காவல்துறையினர் தனிப்படை அமைத்து முயன்று வருகின்றனர்.

முருகன் குறித்த செய்திகள் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.