மகளை கட்டித்தருவதாக கூறி கள்ளக்காதலனுடன் நெருக்கம்! 40 வயது விஜயாவுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

தன் மகளை திருமணம் செய்து வைத்ததாக கூறி ஏமாற்றியதால் கள்ளக்காதலியை மேஸ்திரி அடித்துக்கொலை செய்திருக்கும் சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே விலுக்கனந்தல் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 30-ஆம் தேதியன்று இவர் தலையில் பலத்த காயங்களடைந்து கேளூர் குண்டுமேடு மலைப்பகுதியில் உரிய முட்புதர்களில் சடலமாக கிடந்தார். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த கேளூர் காவல்துறையினர் விஜயாவுடன் பணிபுரியும் பிற கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். விஜயகாந்த் பணிபுரியும் இடங்களில் மேஸ்திரியாக சுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

அதாவது, விஜயாவுக்கும் மேஸ்திரி சுப்பிரமணியம் இடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதலின் தொடக்கத்தில் விஜயா தனக்கு பிறந்த மகன் சுப்பிரமணிக்கு திருமணம் செய்து வைப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஆனால் காலம் முன்னேறி செல்ல விஜயா தான் கூறியதை மறுத்து விட்டு வேறு ஒருவருக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்துவிட்டார். சுப்பிரமணி விஜயாவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த சுப்பிரமணி விஜயாவை பலமாக தாக்கி கேளூர் மலைப்பகுதியில் தள்ளிவிட்டுள்ளார். 

காவல்துறையினர் சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.