மருதமலை பாம்பாட்டி சித்தர் குகை

மருதமலையின் வேறு பெயர்கள் மருதமலைவரை, மருதவரை, மருதவெர்பு, மருதகுன்று, மருதவோஸ்கல், காமர் பிரங்கு, மருதாசலம், வேல்வரை என்று பேரூர் புராணம் கூறுகிறது.


இங்கே பதினெட்டு சித்தர்களில் ஒருவராகப் போற்றி வணங்கப்படும் பாம்பாட்டி சித்தரின் குகை உள்ளது. இங்கே தான் பாம்பாட்டி சித்தர் மருகபெருமானை நினைத்து தியானித்து முக்தி அடைந்தார்.

அந்தக் குகையில் உள்ள ஒரு பெரிய பாறையில் சுயம்புவாக 5 தலை நாகம் உருவத்தில் தோன்றி இருப்பதை இன்றும் காணலாம்.  அங்கு ஐயரிடம் கேட்டபோது, இது குண்டலி யோகத்தைப் பற்றி குறிப்பதாக நம்பப்படுகிறது என்றார்.  இந்தக் குகைக்கு தினமும் ஒரு நாகம் வந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பால், பழத்தை அருந்திவிட்டு செல்வதாகவும் சொல்கிறார்.  ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இங்கிருந்து முருகன் கருவறைக்கு ரகசிய சுரங்கபாதை இருக்கிறது. இதன் வழியாக பாம்பாட்டி சித்தர் தினமும் பாம்பு உருவில் சென்று முருகனை வழிபடுவதாகவும் நம்பப்படுகிறது.

சில நேரங்களில் அந்த இருப்பிடத்தில் பாம்பு ஒன்று வந்து சுற்றிவிட்டுப் போகிறதாம். சிலர் கண்களுக்கு மட்டும் தென்படுகிறதாம். யாரையும் அது துன்புறுத்துவதில்லை. மருதமலை முருகன் கோயிலில் இருந்து சற்று நடந்துபோய் பின்புறம் சில படிகள் இறங்கிப் போனால் இந்தச் சித்தர் இருப்பிடம் வருகிறது.