கல்யாணம் ஆகி வருசம் 2 ஆச்சு! கணவனோ வெளியூரில்! குழந்தை இல்லை! மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!

இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் வாணதிரையன்பட்டினம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 30. திருப்பூர் மாவட்டத்தில் ராஜ்குமார் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

இத்தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லை. நேற்று முன்தினம் மாலையில் சுபிதாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகியுள்ளது. ராஜ்குமாரின் தங்கை சௌந்தர்யா சுபிதாவை மருத்துவமனையில் சேர்த்தார். சுபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

தகவலறிந்த சுபிதாவின் பெற்றோர் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். மேலும் ராஜ்குமாரின் உறவினர்கள் மீது பலத்த சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் சுபிதாவின் உடலை வாங்க முடியாது என்று அவரின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உறுதியளித்த பின்னர் சுபிதாவின் பெற்றோர் அவருடைய உடலை வாங்கிக்கொண்டனர். இந்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.