நீ அழகா இல்ல! கருப்பா இருக்க! கணவனின் விபரீத பேச்சால் மனைவி எடுத்த பரிதாப முடிவு!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவமானது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் மருதப்பட்டினம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இளங்கோஎன்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் சுபா. இத்தம்பதியினருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவருக்கு 2016-ஆம் ஆண்டில் மைதிலி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்த சில மாதங்களை சந்தோஷமாக கழித்த மைதிலி பின்னர் கொடுமையை அனுபவிக்க தொடங்கினார்.

சில மாதங்களிலிருந்தே அருண் மைதிலியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர் அருணுடன் இணைந்து கொண்டு இளங்கோ மற்றும் சுபா மைதிலியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் மைதிலி மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மைதிலி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மைதிலியின் அலறல் குரலை கேட்டு விரைந்து வந்துள்ளனர். 

பின்னர் அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருதப்பட்டினம் காவல்துறையினர் அவரிடம் இறுதி வாக்குமூலம் பெற்றனர். அதில் அவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறியுள்ளார். 

இதனைப்பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் அருண் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மருதப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.