ஓரினச்சேர்க்கை! புதுக் கணவனை தவிக்கவிட்டு இளம்பெண்ணுடன் ஓடிய மணப்பெண்!

திருமணமான சில நாட்களிலேயே தன்னுடைய லெஸ்பியன் தோழியுடன் ஹரியானா சென்று தலைமறைவான சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் சஜான்பூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். 

திருமணமான சில நாட்களிலேயே அந்தப் பெண் தன் கணவர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருமணமான 23 நாட்களிலேயே அந்த பெண் காணாமல் போயுள்ளார்.  

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த பெண் அரியானா மாநிலத்தில் பதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

திருமணம் ஆவதற்கு முன்னரே அந்த பெண், லெஸ்பியன் ஓரினச் சேர்க்கையாளராக இருந்துள்ளார். அவருக்கு தன் தோழி மீது அதீத ஈடுபாடு இருந்ததுண்டு. கணவருடன் நடந்த திருமணத்தில் பெரிதும் ஈடுபாடு இல்லாததால் அவர் தன் தோழியிடமே சென்றுள்ளார்.

காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரு பெண்களும் தங்களுக்கு 18 வயது நிரம்பி உள்ளதால் வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுத்து கொள்ள முடியும் என்று தங்கள் வாதத்தை வைத்துள்ளனர். இந்த வழக்கானது தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.