பாம்பு கொத்திய போது உத்ரா அலறாதது ஏன்? அருகே இருந்தும் கணவனை மட்டும் பாம்பு கொத்தாது எப்படி? வெளியானது பதைபதைக்க வைத்த தகவல்!

திருமணமான பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவத்தில் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கொல்லம் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அஞ்சல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு உத்ரா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக பணிபுரியும் சூரஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை ஒன்றுள்ளது.

இத்தம்பதியினர் பறக்கோடு என்ற இடத்தில் வசித்து வந்தனர். சென்ற மாதம் திடீரென்று ஒரு நாள் உத்ராவை ஆனால் இவ்வகை பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது. உடனடியாக அவரை திருவல்லாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த 16 நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால் உத்ரா தன்னுடைய தாயாரின் வீட்டிலேயே தங்கி வந்தார். தாய் வீட்டிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் உத்ரா கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்‌. திடீரென்று 16-ஆம் தேதியன்று மீண்டும் பாம்பு கடித்து உத்ரா உயிரிழந்துவிட்டார். 

இதற்கிடையே முத்ரா இறந்த செய்தி அவருடைய உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உத்ராவின் பெற்றோர் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அஞ்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதாவது, "பாம்பு கடித்த போது உத்ரா 2-வது மாடியில் உள்ள ஏ.சி.

அறையில் உறங்கி கொண்டிருந்தார். அந்த அறை முழுவதும் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. ஆதலால் பாம்பு அறைக்குள் வெளியிலிருந்து நுழைவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

அதுமட்டுமின்றி, உத்ரா உயிரிழப்பதற்கு 2 நாட்கள் முன்னர்தான் சூரஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு இருவரும் ஒரே அறையில்தான் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையிலேயே சூரஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சூரஜின் தாயார் உத்ராவை எழுப்ப முயன்ற போதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மனைவி இறந்த பிறகு சூரஜ்ஜின் செயல்பாடுகளில் நாங்கள் பல்வேறு விதமான மாற்றங்களை கண்டறிந்தோம். மேலும் முதன்முறை உத்ராவை பாம்பு கடிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அதை அருகில் பாம்பு ஒன்றை கண்டு சூரஜிடம் கூறியுள்ளார். அப்போது சூரஜ் ஒற்றை கையால் அந்த பாம்பை எடுத்து கோணிப்பைக்குள் போட்டு வெளியே எடுத்து சென்றுவிட்டார். 

ஏற்கனவே வரதட்சணை கொடுமையால் அவதிப்பட்டு வந்த உத்ராவை சூரஜ் திட்டமிட்டு பாம்பு கடிக்க வைத்து கொலை செய்திருப்பார் என்று சந்தேகப்படுகின்றோம்" என்று காவல் நிலையத்தில் உத்ராவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, 5 மாதங்களுக்கு முன்பே சூரஜ் உள்ளூர் பாம்பாட்டி இடமிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்புகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பே மனைவியை கொலை செய்வதற்காக ஒருமுறை முயற்சி செய்தார். அதிலிருந்து தப்பித்த மனைவியை மீண்டும் ஒருமுறை பாம்பை வைத்து சூரஜ் கொலை செய்துள்ளார் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் நிபுணர் குழு ஒன்று இது சம்பந்தப்பட்ட விசாரணையில் பங்கேற்றது. இந்த குழுவின் உறுப்பினர்கள் மிக முக்கியமான பல செய்திகளை கண்டறிந்துள்ளனர். அதாவது உத்ராவை தாக்கிய பாம்பு மிகக்கொடிய விஷம் கொண்டது என்றும், பாம்பு தீண்டியவுடன் அதன் விஷமானது நேரடியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். அவ்வாறு நடக்கும் போது மூச்சுத்திணறல் கடுமையாக இருக்கும் என்றும் உயிருக்கு போராடுவதற்கான நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 

அப்போது நிச்சயமாக உத்ரா அலறியிருக்க வேண்டும். அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை என்றால் அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்பே சூரஜ் செய்திருப்பார் என்று நிபுணர் குழு கணிக்கிறது. அதுமட்டுமின்றி அந்த பாம்பு நிச்சயமாக சூரஜை காக்க முற்பட்டிருக்குமென்றும், தாக்குதலிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சூரஜ் முன்பே கற்றிருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் குழு காவல்துறையினரிடம் கூறியுள்ளது.

அது மட்டுமின்றி பிற குற்றவாளிகளுக்கு ஏதுவாக அமைந்துவிடக்கூடாது என்பதால், மிக விரைவில் காவல்துறையினர் விரிவான விசாரணைகள் ஈடுபட வேண்டும் என்றும் நிபுணர் குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.