அவர் போய்ட்டார் நீ வா..! உல்லாசத்துக்கு அழைத்த 30 வயது பெண்ணை கதற கதற 14 வயது சிறுவன் செய்த சம்பவம்!

ஆசைக்கு இணங்க மறுத்ததால் 14 வயது சிறுவன் கள்ளக்காதலியை கொலை செய்திருப்பது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷீலா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு மோகன் குமார் மற்றும் சத்யம் குமார் ஆகிய 2 ஆண் குழந்தைகளும், துளசி குமாரி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர்கள் பிகார் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி திருப்பூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அங்கு கொங்குமெயின் ரோடு என்னுமிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தனர். அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் இருவரும் பணிபுரிந்து வந்தனர்.

கணவர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற பின்னர், ஷீலா தேவிக்கு, பீகார் மாநிலத்திலிருந்து திருப்பூரில் வசித்து வந்த 14 வயது இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் சீலா அந்த சிறுவனை அழைத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மூலம் மிதுன் தாதியா கேள்விப்பட்டுள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தன. சிறுவனிடம் இத்தகைய தகாத உறவில் ஈடுபடுவது அநாகரீகமானது என்று மிதுன் ஷீலாதேவியை கண்டித்துள்ளார். ஆனாலும் ஷீலாதேவி கணவரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சென்ற பொங்கலின் போது, கணவன் மனைவியிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் முடிவாக, மிதுன் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் பீகார் மாநிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஷீலா தேவி அவருடன் செல்லவில்லை. கணவர் சென்ற பின்பும் அந்த இளைஞருடன் ஷீலா தேவி தொடர்பு வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் காலை ஷீலாதேவியின் வீட்டு கதவுகள் நெடுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகித்து அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அவர் கழுத்தில் அறுபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அந்த சிறுவனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சிறுவன் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று முன்தினம் ஷீலாதேவியை ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.