திருமணமான 10 நாளில் இளம் பெண் என்ஜினியர் தற்கொலை! காரணம் அந்த டார்ச்சர்?

கல்யாணம் ஆகிய 10 நாட்களிலேயே இளம் பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாணியம்பாடி பகுதியின் அருகே மேட்டுப்பாளையம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான தீபிகா என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இவர் தனியார் வங்கி ஒன்று உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில நாட்கள் கணவன் வீட்டில் வாழ்ந்து வந்த தீபிகா 2 தினங்களுக்கு முன்னர் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து தூக்கிட்ட நிலையில் இருந்த தீபிகாவை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறக்கி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை சம்பவமானது வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட உதவி கலெக்டர் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளார். விசாரணையின் இறுதியில் தான் திருமணமாகி 17 நாட்களேயான நிலையில் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம் வெளியே சொல்ல முடியாத டார்ச்சர் தான் தீபிகா தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.