பானை போல் பெரிதாகிக் கொண்டே செல்லும் வயிறு! தவிக்கும் 19 வயது இளைஞன்! கதறும் குடும்பத்தினர்!

இந்தியாவின் வட மாநிலத்தில் ஆண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திர நோயால் வயிறு பெரிதாகியிருப்பது மருத்துவர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் முசாபர்பூர் என்னும் நகர் அமைந்துள்ளது. இங்கு சுஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 19. இவர் 7 வயதில் இருந்தபோது இவருடைய வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக தொடங்கியது. தற்போது பத்தொன்பது வயதை எட்டியுள்ள நிலையில் இவருடைய வயிறு பானை போன்று பெரிதாகிவிட்டது. 

இவர் தற்போது மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். அக்கம் பக்கத்தினர் இவரை கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவர்களை கலந்தாலோசித்து உள்ளார். ஆனால் இதுவரை மருத்துவர்களால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர்களால் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

தற்போது மருத்துவர்கள் வெகு தொலைவில் உள்ள டெல்லியில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவரால் அவ்வளவு தொலைவில் சென்று சிகிச்சை மேற்கொள்ள இயலவில்லை. இவருடைய தாயார் இவருக்கு உறுதுணையாகயிருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நோயின் மூலம் அவருடைய வயிறு மேலும் பெருத்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.