திடீர் நெஞ்சுவலி! இயக்குனர் மணிரத்னம் அப்பலோவில் அனுமதி!

அப்பலோவில் அனுமதி


திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் தனது வீட்டிலிருந்த மணிரத்தினத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அவரது வீட்டில் இருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்தினம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலியால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிரத்னத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் இதே போல் உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மணிரத்னம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் மணிரத்னத்திற்கு பயப்படும் படி எதுவும் இல்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.