உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

மணத்தக்காளி கீரையை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாத காரணத்தாலே பலரும் இதனை உபயோகிப்பது இல்லை. இதன் இலை, வேர், காய் மற்றும் பழம் போன்றவை மருத்துவக் குணம் வாய்ந்தவை.


வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது.

• மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப்புண், உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

• மணத்தக்காளி இலையை கீரை போல் கடைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்னை, மலச்சிக்கல் தீரும்.

• மணத்தக்காளி இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் கட்டிவந்தால் கட்டி, வலி, வீக்கம் போன்றவை மட்டுப்படும்.

• வியர்வை, சிறுநீர் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு.

மணத்தக்காளி காயை பறித்து சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி வற்றலாக சாப்பிட்டால் சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும். மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கும் மணத்தக்காளி கீரை நல்லது.