22 வயது இளம்பெண் புற்றுநோய்க்கு எப்படி நிதி கொடுத்தார் தெரியுமா? நெகிழவைக்கும் சம்பவம்.

கேன்சர் பாதிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஒருவர் தான் 15 வருடங்களாக வளர்த்த முடியை தியாகம் செய்திருப்பது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


அமெரிக்காவில் ரோனால்டோ என்ற இளைஞர் வாழ்ந்து வருகிறார் இவருடைய வயது 22. இவர் கடந்த 15 வருடங்களாகவே தலைமுடியை வெட்டியதில்லை. ஆசை ஆசையாக நீளமான முடியை ரொனால்டோ பராமரித்து வந்தார்.

இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது. இதனிடையே சென்ற வியாழனன்று அமெரிக்காவின் ராணுவத்தில் காலாட்படைக்காண ஆட்கொணர்வு முகாம் நடைபெற்றது. காலாட்படையில் சேர்வதற்கு "தலைமுடி காது மற்றும் புருவத்தை தொட்டு விட கூடாது" என்பது முக்கிய சட்டமாக விளங்கி வருகிறது.

ஆசை ஆசையாக வளர்த்த தலைமுடி என்றாலும் வாழ்க்கை இலட்சியத்தை அடைவதற்காக தன் தலைமுடியை தியாகம் செய்ய ரொனால்டோ முன்வந்தார்.  அமெரிக்கா நாட்டில் "லாப்ஸ் ஃஆப் லவ்" என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கேன்சர் மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டு வரும் குழந்தைகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக தலைமுடி தானம் நடைபெற்று வருகிறது.

தன் தலைமுடியை தியாகம் செய்ய நினைத்த ரொனால்டோ நேராக இந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்று தானமாக அளித்துள்ளார்.  அவர் கூறுகையில், "மிகவும் அதிர்ஷ்டம் அடைந்த சிறுமிகள் என் தலைமுடியை உபயோகப்படுத்துவர்" என்றார்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.