ஒரே ஒரு தும்மல் தான்..! சலூனில் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்! பரபர வீடியோ உள்ளே!

முடி திருத்தும் கடையில் திடீரென்று தும்மியதால், இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


நம்மில் பலரும் சிகை அலங்காரத்தை மிகவும் முக்கியமானதாக கருதுகின்றோம். மனிதனின் முக அழகை, சிகை அலங்காரம் அதிகரிக்கும் வல்லமை படைத்தது. இதனால் பலரும் தங்களுடைய சிகை அலங்காரத்தை மிகவும் நுணுக்கமாக கையாளுகின்றனர்.

இதனிடையே முடி திருத்தும் கடையில் இளைஞர் ஒருவர் தும்மியதால், அவரின் பாதி முடி காணாமல் போன வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் சிகை அலங்காரம் செய்வதற்காக முடி திருத்தும் கடைக்கு சென்றுள்ளார். அவருடைய தலையில் மெஷினை வைத்து முடி திருத்துபவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தும்மியதால் அவருடைய நடுப்பகுதியில் இருந்த முடி சரைக்கப்பட்டுவிட்டது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் முடி திருத்துபவரை அடிக்க செல்கின்றார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.