துடிக்க வைத்த தலைவலி! ஹாஸ்பிடல் சென்ற இளைஞர்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தலைக்குள் இருந்ததை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

கடுமையான தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற இளைஞருக்கு நீக்க முடியாத புற்றுநோய் இருந்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் அஷான் கோரிக். இவருடைய சகோதரரின் பெயர் ஐசா. இவ்விருவரும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக அஷான் தலைவலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். அவரால் தாங்க முடியாத நிலைக்கு சென்ற போது பிரிஸ்டல் நகரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்யுமாறு பரிந்துரைத்தனர். ஸ்கேன் ரிப்போர்ட் சோதித்த மருத்துவர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். அஷானின் தலைப்பகுதியில் தீர்க்கவே முடியாத புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இனிமேல் எந்த வித சிகிச்சை அளித்தாலும் இந்த புற்று நோயை குணப்படுத்த இயலாது என்றும் கைவிரித்தனர். இன்னும் ஓராண்டிற்குள் அவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அவருடைய சகோதரரான ஐசா, அஷானின் மேல்சிகிச்சைக்காக சமூக வலைதளங்களில் நிதி திரட்டி வருகிறார். அவர், "என் சகோதரரின் நிலையை கேட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு நீக்க முடியாத புற்றுநோய் இருப்பது எங்கள் குடும்பத்தினரை உறைய செய்துள்ளது. அவருடைய மேல்சிகிச்சைக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.