கொரோனா நோயுடன் சென்று டாஸ்மாக் கடை வரிசையில் நின்ற பெருங்குடிமகன்..! இப்போது எல்லோரையும் தேடும் அதிகாரிகள்..! தேனி திக் திக்..!

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மதுக்கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ள செய்தியானது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் தேனியில் நோய்த்தொற்று கணிசமாக உயருகிறது. இன்னிலையில் சென்னை கோயம்பேட்டில் சரக்கு ஏற்றுமதியில் பணியாற்றிவந்த நபர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரான தேவநாதப்பட்டிக்கு அருகேயுள்ள கோட்டார்ப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுக்கடை திறக்கப்பட்டபோது, கோட்டார்ப்பட்டி கிராமத்திலிருந்து கெங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்‌. 

உடனடியாக கெங்குவார்பட்டி மதுக்கடையை மது வாங்க வந்தவர்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோட்டார்பட்டி கிராமம் முழுவதும் சுகாதாரத்துறையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில் கிராமத்திலுள்ள பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வீரபாண்டியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் நேற்று நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனர் என்றும் 14 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது கோட்டார்ப்பட்டி கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.