ஆசைக்கு இணங்க மறுப்பு! திருமணமான நண்பனின் 32வயது சகோதரிக்கு 21வயது இளைஞனால் ஏற்பட்ட கொடூரம்!

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவமானது சின்னசேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்குட்பட்ட பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் எனும் இடத்தை சேர்ந்தவர் சின்னதுரை. சின்னதுரையின் வயது 32. கடலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாதேவி. இவருடைய வயது 28.

இவ்விருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னதுரை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் இவர்கள் பாக்கம்பாடி காட்டுக்கொட்டாயில் மாமியாருடன் வசித்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு பொங்கலுக்கு அருணாதேவியின் பெரியம்மா மகன் சீர்வரிசை எடுத்து வந்திருந்தார். அவருடன் ஏழுமலை என்ற நண்பர் வந்திருந்தார். அருணாதேவியை பார்த்தவுடன் ஏழுமலைக்கு மிகவும் பிடித்தது. ஒருதலைக்காதல் செய்ய தொடங்கினார். அருணாதேவியிடமிருந்து செல்போன் எண்ணை பெற்று கொண்டார். சொந்த ஊருக்கு சென்ற பிறகு ஏழுமலை தொடர்ந்து அருணாதேவியிடம் மொபைல் மூலமாக பேசி வந்துள்ளார்.

நாளடைவில் ஏழுமலையின் பேச்சில் ஏற்படும் மாற்றங்களை அருணாதேவி புரிந்து கொண்டார். அருணாதேவியிடம் ஏழுமலை தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அருணாதேவி கடுமையாக ஆத்திரமடைந்தார். மேலும் தன் கணவன் மற்றும் அண்ணனிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார். 

ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏழுமலை தொடர்ந்து அருணாதேவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அருணாதேவி அவருடைய செல்போனை சுவிட்ச்ஃஆப் செய்து விட்டார்.

பலமுறை முயற்சித்தும் அருணாதேவியிடம் ஏழுமலையால் பேச இயலவில்லை. அருணா தேவியை நேரில் சந்தித்து பேசி விட ஏழுமலை முடிவு செய்தார். நேற்று ஏழுமலை பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய்க்கு வந்துள்ளார். அருணாதேவியின் வீட்டில் யாருமில்லை என்பதை புரிந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஏழுமலை கண்டு அதிர்ந்த அருணாதேவி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது ஏழுமலை அருணாதேவியை கட்டிப்பிடிக்க நினைத்தார். அருணா தேவி விலகி சென்ற முயன்றதால் வீட்டில் இருந்த கானிலிருந்த மண்ணெண்ணையை அருணாதேவியின் மீது ஊற்றி கொளுத்திவிட்டார்.

அருணாதேவியின் மீது மளமளவென தீ பரவியது. ஏழுமலை அருகிலிருந்ததால் அவர் மீதும் தீ பரவ தொடங்கியது. இருவரும் அலறியடித்து கத்தியதால் அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருணாதேவியிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். காவல்துறையினர் ஏழுமலை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சின்ன சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.