பூனையை தூக்கில் தொங்கிவிட்டு துடிதுடித்து உயிர் போவதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞன்..! அதற்கு அவன் கூறிய பகீர் காரணம்! நெல்லை அதிர்ச்சி!

டிக்டாக் செயலியில் அதிக லைக்குகள் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் பூனையை கொலை செய்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டிக்டாக் செயலி அறிமுகம் ஆனதிலிருந்து பல்வேறுவிதமான பிரச்சனைகள் ஊடகங்களின் மூலம் வெளியாகின்றன. இந்த செயலியில் உங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தி லைக்குகள் பெறவேண்டுமென்று கண்மூடித்தனமாக ஒரு கூட்டம் கலைந்து வருகிறது. முக்கியமாக பெண்கள் வரம்பு மீறி டிக்டாக் செயலியில் ஈடுபடுவதையும் அவ்வப்போது நம்மால் பார்க்க முடிகிறது.

பிரபலம் அடைவதற்கு சில பல விபரீதமான முடிவுகளை எடுப்பதையும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அதுபோன்ற ஒரு விபரீதம் தான் நெல்லை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பழவூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட செட்டிகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய தந்தை மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்‌.

தங்கராஜ் டிக்டாக் மீது மோகம் உள்ளதால் மாடுகளை வைத்து வீடியோக்களை செய்து வந்துள்ளார். ஆனால் தான் எதிர்பார்த்த அளவிற்கு லைக்குகள் கிடைக்காத காரணத்தினால் பல விபரீத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தான் ஆசை ஆசையாக வளர்த்து வந்த பூனையை சித்திரவதை செய்து தூக்கில் தொங்கவிட்டு வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு அவருக்கு நினைத்த லைக்குகள் வந்தன. கூடவே காவல்துறையினரும் வீட்டிற்கு வந்தனர். பூனையை சித்திரவதை செய்து படுகொலை செய்ததால் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.